விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா(45). இவர் இன்று (செப்.11) வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி மற்றும் அரிவாள்களை கொண்டு அவரைத் தாக்கி படுகொலை செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.