விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை அருகே பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்தால் தான் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டுவர முடியும். அதனால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். திமுக போல் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல இது, மக்களுக்கு நன்மை பயக்கும் கூட்டணி.
மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி தேவை! - எடப்பாடி பழனிசாமி
விருதுநகர்: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி தேவை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே ஆண்டுக்கு 5.5 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்தது அதிமுக அரசு மட்டும்தான். தேர்தலுக்கு மட்டுமே வாக்குறுதி கொடுக்கும் கட்சி திமுக. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலத்தில் முதல் மாநிலம் தமிழகம், அதேபோல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிலும் முதலிடம் நாம்தான். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது அதிமுக அரசு” என்றார்.
இதையும் படிங்க: செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார்!