விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பரங்கிநாதபுரம் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இன்று விநியோகம் செய்யப்பட்ட நீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடிநீருடன் கழிவுநீர் கலந்து விநியோகம் - பொதுமக்கள் அதிர்ச்சி - drinking water issue
விருதுநகர்: பரங்கிநாதபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து விநியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குடிநீருடன் கழிவுநீர்
மேலும், கடந்த மூன்று மாதங்களாகக் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், உரியவர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும்அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.