விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை அருகில் உள்ள ஈ.ரெட்டியபட்டி கிராமத்தில் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தென்மாவட்டங்களிலுள்ள விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 72 அணிகள் கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள்: 72 அணிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் - விருதுநகரில் 72 அணிகள் பங்குபெற்ற கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது
விருதுநகர்: சாத்தூர் அருகே ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 72 அணிகள் பங்குபெற்ற கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கைப்பந்து போட்டியை தொடங்கிவைத்த சமஉ ராஜவர்மன்
இந்த விளையாட்டுப் போட்டியினை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தொடங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தி உரையாற்றினார். மேலும், வெற்றி பெற்ற அணிகளுக்கு காசோலையும் பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க: ஹாக்கி போட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள்!