விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காட்டெருமை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழப்பு - காட்டெருமை தாக்கி ஒருவர் பலி
விருதுநகர்: மலைப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற நபரை காட்டெருமை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காட்டெருமை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்தார்!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூமாப்பட்டி காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பார்க்க: தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு