தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் ஒரு புரோக்கர்' - அமமுக வேட்பாளர் சர்ச்சை பேச்சு! - virudhunagar candidates

விருதுநகர்: அதிமுக வேட்பாளர் ராஜவர்மனை புரோக்கர் என அமமுக வேட்பாளர் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக வேட்பாளர் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன்

By

Published : Mar 30, 2019, 9:56 AM IST

விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக போட்டியிடும் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் பேசுகையில், தற்போது உள்ள அமைச்சர்கள் பாஜகவின் அடிமைகளாக உள்ளதாக விமர்சித்தார்.

அன்று மூன்று கட்டை உருட்டி விளையாடும் தொழிலை பார்த்தவர்தான் இன்று தமிழகத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்கள். 27 ஆண்டுகளாக ராஜேந்திர பாலாஜியுடன் இருந்து அவரை நல்லவர், வல்லவர் என்று சொல்லி அவருக்கு பதவி வாங்கி கொடுத்தோம். சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜியின் புரோக்கர் என எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் கடுமையாக சாடினார்.

அமமுக வேட்பாளர் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details