பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
'அதிமுகவை குறை கூற சீமானுக்கு என்ன தகுதி இருக்கு..! - கடம்பூர் ராஜூ சாடல் - press meet
விருதுநகர்: "அதிமுக தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை பற்றி குறை கூற சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவை குறை சொல்ல சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள பல் மருத்துவமனைக்கு காமராஜர் பெயர் வைப்பது குறித்து மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் அரசு சார்பில் பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.