தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை - virudhunagar sexual harassment case

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள ஜூனத் அகமது மற்றும் மாடசாமிக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

விருதுநகர் பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
விருதுநகர் பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

By

Published : Apr 1, 2022, 11:04 PM IST

Updated : Apr 4, 2022, 5:58 PM IST

விருதுநகர்: 22 வயது இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் ஹரிகரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து இன்று 4ஆவது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். இவர்களை தினமும் காலை மற்றும் மாலை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சிபிசிஐடி அலுவலகம் வந்து பரிசோதனை செய்துவிட்டுச் செல்வார்கள்.

விருதுநகர் பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

இன்று(ஏப்.1) வழக்கம்போல், பரிசோதனை செய்ததில் ஜூனத் அகமது, மற்றும் மாடசாமி ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லாததால் இருவரை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சை செய்ததில் 4 நாட்கள் தொடர்ச்சியாக இவர்களிடம் விசாரணை செய்து வருவதால் ஜுனத் அகமதுவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜூனத் அகமதுவிற்கு எக்கோ பரிசோதனையும், மாடசாமிக்கு ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டது என விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒரு நிமிட பேச்சு.. விஜய் வசந்த் கோரிக்கை ஏற்பு.. நாகர்கோவில் மக்களுக்கு வரப்பிரசாத திட்டம்!

Last Updated : Apr 4, 2022, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details