தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூலித்தொழிலாளி தீ வைத்து தற்கொலை: விருதுநகரில் பரப்பரப்பு! - தீ வைத்து தற்கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தீராத உடல்நலக்குறைவால் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறிய காவல்துறை தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கூலித்தொழிலாளி தீ வைத்து தற்கொலை: விருதுநகரில் பரப்பரப்பு!

By

Published : May 26, 2019, 1:36 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.டி.ஆர். நகர் நான்காவது தெருவில் வசித்துவருபவர் நாராயணன் (62). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (50), மகன் பாலகிருஷ்ணன், மகள் பானுப்பிரியா.

அருப்புக்கோட்டையிலுள்ள 'இனிமை' என்னும் ஒரு உணவகத்தில் தோசை மாஸ்டராக பணிபுரிந்த வந்த நாராயணன் இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார், அப்போது உடலில் தீ பற்றிய நிலையில் இவர் அலறிய சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளே முழு உடல் கருகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் வேலைக்குச் சென்ற அவரது குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவரின் குடும்பத்தினர் தீயில் கருகிய அவர் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின் வந்த அருப்புக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, தொடர் உடல்நலக் குறைவினால் சிகிச்சை பெற்றுவந்த நாரயணன், விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர்.

அனைவரும் தெரிவித்த நாராயணனின் தற்கொலைக்கான காரணம் காவல் துறையினருக்கு திருப்தி அளிக்காததால், இந்த சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறிய வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details