விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 9 ஆயிரத்து 441 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) மேலும் 101 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 542ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகரில் மேலும் 101 பேருக்கு கரோனா!
விருதுநகர்: மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
101 fresh COVID-19 cases
இதுவரை 7 ஆயிரத்து 621 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதேபோல ஆயிரத்து 805 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மேலும் இருவர் உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வருமான வரித்துறை அலுவலர்