விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியாபட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த லட்சுமணபெருமாள் சிந்துஜா தம்பதியரின் நான்கு வயது மகள் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தினமும் அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விளையாடச் சென்ற ராதா அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவர் கதிர்வேல்சாமி என்பவர் குழந்தை ராதாவை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.