தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்.பி' - Virudhunagar MP manik thakur

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என்ற ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக, மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக ஆய்வு செய்த அமைச்சர்!

By

Published : Nov 1, 2019, 11:40 PM IST

கடந்த மாதம் 20ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என ஈடிவி பாரத் தமிழில் செய்தி வெளியானது. இது குறித்து விருதுநகர் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக ஆய்வு செய்த அமைச்சர்!

இந்நிலையில் விருதுநகர் மாநிலங்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டம், தேசிய நலவாழ்வு இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள் நலவாழ்வு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ம௫த்துவ திடக்கழிவு மேலாண்மையை நகராட்சியுடன் இணைந்து செயல்படுத்திட அறிவுரை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details