தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரட்டும் கரோனா: 100 பேருக்கு தொற்று; 50 பேர் பூரண குணம்! - விருதுநகர் கொரோனா

ஏற்கனவே 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஜூலை 4) மேலும் 100 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை 782 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விருதுநகர் கொரோனா
விருதுநகர் கொரோனா

By

Published : Jul 4, 2020, 10:42 PM IST

விருதுநகர்: ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 50 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று மேலும் 100 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை 782 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் 50 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரையில் மொத்தமாக 353 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 429 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு கரோனா பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details