விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் கோயில் அமைந்துள்ளது.
சதுரகிரி கோயிலில் இரண்டாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்!
விருதுநகர்: ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சதுரகிரி கோயிலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கோயிலுக்கு மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு அளிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வின் காரணமாக நிபந்தனைகளுடன் கோயிகளுக்கு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) பௌர்ணமியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 2 ஆயிரத்து 100 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பாருங்க:சிவனின் சீற்றத்தால் விநாயகரின் தலை விழுந்த இடம்!