இந்தியா முழுவதும் கடந்த 60 நாள்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்டங்களாக 1,600க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பிகார், உத்தரப் பிரதேசம், பாட்னா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.