விருதுநகர் மாவட்டம் எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்த கிராமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக குடிநீர், வடிகால் வசதி செய்து தரப்படவில்லை எனவும் தெருவிளக்கு போன்றவற்றை பஞ்சாயத்து நிர்வாகம் சரிவர பராமரிக்காததால் அடிக்கடி அவை பழுதடைவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஊராட்சி செயலாளர் இருக்கும் பகுதியில் மட்டும் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படாத எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமம் மேலும் வடிகால் வசதி இல்லாததால் தெருக்களில் தண்ணீர் தேங்கி, அங்குள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது, இது சம்மந்தமாக ஊராட்சி செயலாளரிடம் குறைகளை கூற சென்ற மக்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இது சம்மந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: இன்சுலினுக்கு பதில் மாத்திரை: அமெரிக்க ஆய்வாளர்களின் சாதனை!