விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் மாரிமுத்து. இவர் கடந்த ஐந்து வருடங்களாக பிஏசிஎல் என்ற நிறுவனத்தில் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். ஆனால் அந்நிறுவனம் இதுவரை மாரிமுத்து கட்டிய பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிஏசிஎல் நிறுவனத்திலிருந்து பேசுவதாக மாரிமுத்துவிடம் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாங்கள் கட்டிய பணம் ரூ.41 ஆயிரத்தை தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புவதாகவும், தங்கள் வங்கி ஏடிம் எண்ணை தருமாறும் கேட்டுள்ளார். மாரிமுத்துவும் பணம் வரப்போகிறதே என்ற ஆவலில் ஏடிஎம் எண்ணை தெரிவித்துள்ளார்.
எண்ணை வாங்கி கொண்ட அடையாளம் தெரியாத நபர் சிறிது நேரத்திலேயே ஏடிஎம்-இல் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நூதன முறையில் பணமோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் புகார் புகாரின் பேரில் நூதன முறையில் பணமோசடி செய்த அந்நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது உள்ள கால சூழ்நிலையில் நடப்பு நிலவரம் தெரியாமல் அடையாளம் தெரியாத நபர்களின் பேச்சை நம்பி மக்கள் ஏமாந்து வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காதலியின் கணவனை கொலை செய்த திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் தலைமறைவு - திருமங்கலம் அருகே பரபரப்பு