விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வடமாடு விடும் விழா நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட காளை மாடுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
விருதுநகர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! - Vadamadu festival
விருதுநகர்: திருச்சுழியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு
காளையை அடக்கும் வீரர்களுக்கு சில்வர் அண்டா, மெத்தை, நினைவு பரிசு கேடயம், ரூ. 5 ஆயிரம் ரொக்க உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான மக்கள் விழாவில் பங்கேற்று கண்டுகளித்தனர்.