தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் வன்கொடுமை - உறவினர்கள் கைது - விருதுநகர் மாவட்டம்

விருதுநகர்: 15 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது உறவினர் உள்பட இருவர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Two arrested for sexual harassment
Two arrested for sexual harassment

By

Published : Jul 27, 2020, 10:21 PM IST

விருதுநகரில் ஆமத்தூர் அருகேயுள்ள மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயதான மனவளர்ச்சி குன்றிய பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் அண்ணன் முறையான அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் தையல் கடை நடத்திவரும் பாண்டி ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: மூன்று பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details