விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக செல்லையாபுரம் - வெம்பக்கோட்டை சாலையில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிப்பால் அப்பகுதி மக்கள் முழுவதும் இருளில் தவித்தனர்.
விருதுநகரில் திடீர் பெய்த கனமழையால் மரங்கள் சரிவு! - Heavy rain in Virudhunagar
விருதுநகர்: விருதுநகரில் திடீர் பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் சாய்ந்தன.
திடீர் பெய்த கனமழையால் சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றும் காட்சி
பின்னர், வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் கிராமப் பஞ்சாயத்து தலைவர், பொதுமக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி மின்கம்பங்களை சரி செய்தனர்.
இதையும் படிங்க:கனமழையால் வீடுகள் சேதம் - பொதுமக்கள் அவதி!