கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சில நிபந்தனைகளுடன் நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்ககூடாது என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.