தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இராசாசி மருத்துவமனையில் உயிரிழந்தவரின் மனைவி உதவித்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு - நிவாரணம்

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் சரிவர இயங்காத காரணத்தால் உயிரிழந்த ரவீந்திரன் என்பவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி அவரது குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவரின் மனைவி உதவி தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : May 13, 2019, 8:56 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அயன் கரிசல் குளத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் கடந்த 5ஆம் தேதி மாலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென ஏழாம் தேதி மாலை ஐந்து மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு மயிலேஸ்வரி என்ற மனைவியும், தயாளு என்ற மகளும் உள்ளார்.

இராசாசி மருத்துவமனையில் உயிரிழந்தவரின் மனைவி உதவித்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்நிலையில், ரவீந்திரனின் மனைவி மகேஸ்வரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அரசு உதவித்தொகை கேட்டு மனு அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்வரி தன்னுடைய கணவர் இறந்ததற்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஜெனரேட்டர் வேலை செய்யாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தான் காரணம். ஜெனரேட்டர் வசதி சரியாக இருந்திருந்தால் தன்னுடைய கணவனின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். இந்த மருத்துவமனை நிர்வாகமே இதற்கு பொறுப்பு என குற்றம் சாட்டினார். மேலும், தனது மகள் படிப்பிற்கும், குடும்ப செலவிற்கும் கஷ்டத்தில் இருப்பதாகவும், தமிழ்நாடு அரசு தங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details