விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள் , பௌர்ணமி 4 நாள்கள் என மொத் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதோஷம், அமாவாசை மற்றும் பொங்கலை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி முதல் வரும் 14 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இன்று(ஜன.12) அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்தனர். மலையேறி சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், தற்போது திடீர் மழை காரணமாகப் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் ஏராளமான பக்தர்கள் நுழைவு வாயிலிலே காத்திருந்தனர்.
இதையும் படிங்க:ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய 8 பேருக்கு கரோனா!