ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள ஸ்ரீ திருமேனிநாதர், துணை மாலை அம்மன் கோயில் குண்டாற்றில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவருகின்றனர்.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய இந்தக் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. ரமண மகரிஷி பிறந்த இடம் என்பதால் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
மேலும் காசி, ராமேஸ்வரம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு அடுத்தபடியாகவும் உள்ளது. குறிப்பாக 14 பாண்டிய தலங்களில் 10ஆவது தலமாக இக்கோயில் உள்ளது.
திருச்சுழியில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கரோனா தொற்று காரணமாக நேற்று (பிப். 11) திருச்சுழியில் குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம்செய்தனர்.
இதையும் படிங்க: தை அமாவாசை: வெள்ளி கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்!