விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கீழ பெத்தலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் அதே கிராமத்தில் கம்பி மத்தாப்பு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த பகுதியில் மழை பெய்ததால் ஆலைக்கு இன்று (மே. 7) விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மழை பெய்தபோது பட்டாசு ஆலையில் உள்ள குடோனில் மின்னல் தாக்கியதில் கட்டடம் முழுவதும் விரிசல் விட்டு தீ பிடித்தது.