தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாளைய முதல்வரே' என பேனர் வைத்த திருமா ஆதரவாளர்கள்...அதிர்ந்துபோன திமுக உடன்பிறப்புக்கள்! - bithday clebration

விருதுநகர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 57ஆவது பிறந்தநாளை ஒட்டி, 'நாளைய முதல்வரே' என தொண்டர்கள் பேனர் வைத்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்

By

Published : Aug 18, 2019, 12:40 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 57ஆவது பிறந்தநாள், அவரது தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அவரது தொண்டர்கள் 'நாளைய முதல்வரே' என அச்சிடப்பட்ட பேனரை வைத்து அதிரடி காட்டியுள்ளனர். இச்சம்பவம் திமுகவினர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும், நெல்லையில் திருமாவளவனின் ஆதரவாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி, அவரது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

அதேபோல் கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை புதிதாக இணைத்துக்கொண்டோர், 57 நபர்களுக்கு உதவும் வகையில் ரத்த தானம் வழங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details