விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மாடசாமி கோயில் தெரு பகுதியில் ராஜேஷ் என்பவர், பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அரசு உத்தரவின்படி காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (மே.21) காலை ஏழு மணிக்கு வாகனம் மூலம் தனது கடைக்கு பழங்களைக் கொண்டு வந்து இறக்கி வைத்தபோது, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் பழக்கடை திறக்க அனுமதி இல்லை என்று கூறியதோடு, 200 ரூபாயை அபதாரமாக விதித்துள்ளார்.
”தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி உள்ள போதும், ஏன் திறக்கக்கூடாது” என காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பியத்தற்கு, ”காவல் துறையினரிடமே கேள்வி கேட்கிறாயா?” என்று கூறி கடையில் இருந்த பழங்களை கீழே தள்ளி விட்டுள்ளனர். காவல் துறையினரின் இச்செயல் குறித்துப் பேசிய வியாபாரிகள், ”இச்செயல் கண்டிக்கத்தக்கது.
இதுபோல் நடத்துகொண்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகையால் உரிய நேரத்தில் நாங்கள் கடை திறக்க காவல் துறையினர் இடையூறு செய்யக்கூடாது” என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது குறித்து ராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!