விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் மாரிமுத்து என்பவரது நிலத்தில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர் சென்று பார்த்தபோது, வன விலங்குகளைவேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் தயாரித்தபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - arrested
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு தயாரித்த
இதற்கிடையே அவர்கள் தப்பியோடிய நிலையில், காவல் துறையினர் தேடி வந்தனர். பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை படுகாயங்களுடன் கைது செய்து, அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும், தப்பியோடிய சிலரை காவல் துறையினார் தேடி வருகின்றனர்.