தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை தொடக்கம்!

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ராமநாதபுரத்தில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கயுள்ளது.

ராமநாதபுரத்தில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை தொடக்கம்!
ராமநாதபுரத்தில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை தொடக்கம்!

By

Published : May 9, 2021, 3:38 PM IST

இராமநாதபுரம்: கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்டோர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுவரை ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1368ஆக உள்ளது. அதில் பாதிக்கப்பட்டோர் தங்களை வீடுகளில் தனிமைபடுத்திக்கொண்டு உள்ளன.

ராமநாதபுரத்தில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை தொடக்கம்!

நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். மக்கள் காய்கறி வாங்க கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கில் பாரதி நகர் அம்மா பூங்கா அருகில் தற்காலிக சந்தை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை பட்டணம்காத்தான் ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்தனர். இதன் மூலம் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க முடியும் என்றும் கரோனா நோய் தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும் என அலுவலர்கள் கூறினர்.

இதையும் படிங்க: 'முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!' - முதலமைச்சர் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details