ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 51ஆவது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து 108 கலசம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
108 சங்கு, கலசங்களிலிருந்த புனிதநீர் அதிகாலையில் மூலவர், உற்சவ விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துவந்த பால் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.