தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியை கெடுக்கும் 'குடி'யை எதிர்த்து பெண்கள் போராட்டம்! - tasmac protest

விருதுநகர்: சிவகாசி பைபாஸ் ரோட்டில் புதிதாகத் திறக்கப்படவிருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை எதிர்திது போராடிய பெண்கள் !

By

Published : Aug 18, 2019, 7:49 PM IST

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி - மதுரை நெடுஞ்சாலையில் இன்று காலை புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பூஜை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்குடாஸ்மாக் கடை வைத்தால் பணிக்குச் சென்று வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்று கூறி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்

போராட்டம் பற்றிய தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details