விருதுநகர் மெயின் பஜாரில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கிவருகின்றன. இந்த வழியாகவே விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அருப்புக்கோட்டை சாத்தூர் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
டயர் குடோனில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் - டயர் குடோனில் தீ விபத்து
விருதுநகர்: மெயின் பஜாரில் உள்ள டயர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
மேலும், நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் அஜந்தா சைக்கிள் மார்ட் என்ற நிறுவனத்தின் மாடியில் உள்ள டயர் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களில் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனிலிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து காரணமாக விருதுநகர் பஜாரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.