தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்

விருதுநகர் அருகே பணம் கேட்டு தர முறுத்த தாயை, கம்பியால் கழுத்தில் குத்தி கொலைசெய்த மகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

son killed his mother  son killed mother  viruthunagar son killed mother  murder  murder case  murder issue  virudhunagar murder news  crime news  குற்றச் செய்திகள்  விருதுநகர் செய்திகள்  தாயை கொன்ற மகன்  விருதுநகரில் தாயை கொன்ற மகன்  பணம் தர மறுத்த தாயை கொன்ற மகன்  கொலை வழக்கு  கொலை செய்தி
கொலை

By

Published : Oct 16, 2021, 1:30 PM IST

விருதுநகர்: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (62). இவருக்கு சதீஷ்குமார், ஹரிஹரன் என்ற மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் சதீஷ்குமார் விருதுநகர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். திருமணமாகி தனியாக வசித்துவருகிறார். இளைய மகன் ஹரிஹரன் (29) வேலைக்கு ஏதும் சொல்லாமல் தாய் களஞ்சியத்துடன் வசித்துவருகிறார்.

தாயைக் கொன்ற மகன்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னால் களஞ்சியம் அவருக்குச் சொந்தமான சொத்து ஒன்றை விற்பனை செய்ததாகவும், அதில் வந்த பணத்தில் மூத்த மகன் சதீஷ்குமாருக்கு இரண்டு லட்சம் கொடுத்ததாகவும், இளைய மகன் ஹரிஹரன் தனக்கும் இரண்டு லட்சம் வேண்டும் எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஹரிஹரன் கேட்ட பணத்தை களஞ்சியம் கொடுக்க மறுத்ததால், நேற்று முன்தினம் (அக்டோபர் 14) இரவு, களஞ்சியம் உறங்கிக் கொண்டிருந்தபோது, கழுத்தில் கம்பியால் குத்தி ஹரிஹரன் கொலைசெய்துள்ளார். மேலும் அதிகாலையில் வீட்டின் பின் இருந்த செட்டில், உடலை மறைத்துவைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 15) மாலை வேலைக்குச் சென்று திரும்பிய சதீஸ்குமார், அம்மாவைக் காணவில்லை என ஹரிஹரனிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் முன்னுக்குப் பின் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த சதீஷ்குமார், வீடு முழுவதும் தாயைத் தேடியுள்ளார்.

விசாரணை

அப்போது வீட்டுக்கு பின்புறம் உள்ள பழைய செட்டில் தாயின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து மல்லாங்கிணறு காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், களஞ்சியத்தின் உடலைக் கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார், ஹரிஹரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், ஹரிஹரனை மல்லாங்கிணறு காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பிறந்து 3 நாள்களேயான குழந்தையை கோயிலில் வைத்துச் சென்றது யார்?

ABOUT THE AUTHOR

...view details