தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியினை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி போராடிய மக்கள்

விருதுநகர்: எட்டு வயது சிறுமியினை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள்.
குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள்.

By

Published : Jan 23, 2020, 3:06 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் கிராமத்தில் எட்டு வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார்.


இதனை அறிந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்த மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆறு நபர்களைப் பிடித்து, காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் சிறுமியின் உறவினர்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து சிவகாசி - வெம்பக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் சிறுமியினைக் கொலைச் செய்த உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்; மேலும் 25 இலட்சம் நிவாரணத் தொகையையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடக் கோரியும் பல்வேறு முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தினால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, தகவலறிந்து வந்த வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த 24 மணி நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

குற்றவாளிகளைப் பிடிக்கச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

இதனை ஏற்றுக்கொண்ட அனைவரும் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர். அதிகாரிகள் தெரிவித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், மீண்டும் தங்கள் போராட்டங்களை கையிலெடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


இதையும் படிங்க :கோவையில் ரூ.4.27 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details