FIREWORKS FACTORY BLAST:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கடந்த 5ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை காவல் நிலைய காவல் துறையினர் ஆலை உரிமையாளர் பூமாரி, கருப்பசாமி, ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய ஐந்து பேர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.