விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் எட்டு வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருடைய கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்துக் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.