தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசியில் கரோனா நிதியுதவி வழங்கல்!

சிவகாசியில் கரோனா நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

கரோனா நிதியுதவி
கரோனா நிதியுதவி

By

Published : May 16, 2021, 11:32 AM IST

விருதுநகர்:சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரத்தில் உள்ள நியாய விலைக்கடையில், தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு கரோனா நிதியுதவியின் முதல் தவணையாக ருபாய் 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கண்ணன் தலைமையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 27 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 115 கோடி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை மூலம் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தியாகவிருந்தது, தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவை தடைபட்டுள்ளதால், இன்னும் மூன்று நாட்களில் அவை சரிசெய்யப்படும். இந்த 40 மெட்ரிக் டன்னை ஈடுகட்டும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆக்ஸிஜன் உற்பத்தியில் உள்ள நிறுவனங்களிடம் கூடுதலாக உற்பத்தி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 4 தாழ் வெப்பநிலை கொதிகலன்கள் இறக்குமதி செய்து, துர்காபூரிலிருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் வர பெற்றுள்ளது. ஜாம்செட்பூரிலிருந்து நாளை 2 கண்டெய்னர்களில் 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வரவுள்ளது. மேலும் காலியாகும் சிலிண்டர்களை உடனடியாக திருப்பி அனுப்பி மீண்டும் நிரப்பி வாங்கப்படுவதால் இரண்டு நாட்களில் ஆக்ஸிஜன் தேவை பூர்த்தியாகும்.

தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்பரேஷன் மூலம் சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்கள் கொண்டுவர உள்ளதால், நான்கைந்து நாட்களில் 5 ஆயிரம் ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:'நீதிமன்ற வளாகங்களில் கரோனா சிகிச்சை மையங்கள்' - பார் கவுன்சில் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details