தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதி தூக்கி வீசப்படும் முதியவர்; மனதை வதைக்கும் வீடியோ!

விருதுநகர்: காயகுடி அருகே சாலையோரமாக நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

old

By

Published : Jun 3, 2019, 9:00 PM IST

இராஜபாளையத்திலிருந்து மதுரை தேசிய நெடுச்சாலையில் காயகுடி ஆறு அருகே தனியார் இரும்புக்கடையில் காவலாளியாக காசிம் என்ற முதியவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று இவர் டீ குடிப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு சாலையின் ஓரமாக நடந்துசென்றபொது, ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் முதியவர் தூக்கி வீசப்பட்ட இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவியில் பதிவான காட்சி

ABOUT THE AUTHOR

...view details