விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வீராசாமிபுரம் தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு நகராட்சி சார்பாக 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீரில் கழிவுநீர்; பொதுமக்கள் அதிர்ச்சி! - drinking water
விருதுநகர்: வீராசாமிபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து விநியோகிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு இன்று விநியோகம் செய்யப்பட்ட நீர் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மூன்று மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, ஆபரேட்டர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை சரி செய்யவில்லை. நகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் இந்த நீரை தங்களால் பயன்படுத்த முடியவில்லை, கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் நீர் வருவதால் தொற்றுநோய் பரவும் நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.