தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக மணல் கடத்திய 6 டிராக்டர்கள் பறிமுதல்! - கிருஷ்ணவேணி தலைமையில் ரோந்து பணி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 6 டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

sand seized in virudhunagar

By

Published : Nov 5, 2019, 10:50 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான மம்சாபுரம், பந்தபாறை ஆகிய இரண்டு பகுதிகளில் வருவாய்த் துறையினர் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 6 டிராக்டர்களையும், மாதா மலை பின்புறம் மறைத்து வைத்திருந்த ஒரு லாரி மணல் குவியலையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 6 டிராக்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறிமுதல்

மேலும் மணல் மற்றும் மண் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வைரக்காளை, பாண்டி, வெற்றிவேல் முருகன், பவுன்ராஜ், சரவணக்குமார் ஆகிய நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதையும் படிங்க: மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம் மனு!

ABOUT THE AUTHOR

...view details