தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 68 புகையிலை மூட்டைகள் பறிமுதல்

விருதுநகர்: சாத்தூர் அருகே அனுமதியின்றி குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் பறிமுதல்செய்தனர்.

68 புகையிலை மூட்டைகள்
68 புகையிலை மூட்டைகள்

By

Published : Mar 8, 2021, 9:38 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (32). இவர் சாத்தூர் சந்தைப்பகுதியில் பலசரக்குக் கடை நடத்திவருகிறார். சாத்தூர் அருகே ராமலிங்கபுரத்தில் அனுமதியின்றி புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கபட்டிருப்பதாக, சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

68 புகையிலை மூட்டைகள்

தகவலின்பேரில் சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், அம்மாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளா் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை காவலர்கள் ராமலிங்கபுரத்திலுள்ள ராமகிருஷ்ணன் என்பவரின் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 5.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை 68 மூட்டைகளில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் அந்தக் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 68 புகையிலை மூட்டைகளைப் பறிமுதல்செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்த ராமகிருஷ்ணனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details