தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமீறல் பட்டாசு ஆலைகளுக்கு சீல்! - வெடை ஆலை விபத்து

விருதுநகர்: விதிகளை மீறி இயங்கிய 14 பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

crackers
crackers

By

Published : Mar 1, 2021, 5:45 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் அச்சங்குளம், காக்கிவாடன்பட்டி, காளையார் குறிச்சி உட்பட நான்கு பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடிவிபத்துகள் ஏற்பட்டன. இதில் சுமார் 30 பேர் வரை உயிரிழந்தனர். இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து பட்டாசு தொழில் வெடி விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணை பிறப்பித்த நிலையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட ஆய்வுக் குழு பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தது.

அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க வட்டாட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு, கடந்த 10 நாட்களாக பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று 46 பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, விதிமீறல்கள் காரணமாக அதில் 14 பட்டாசு தொழிற்சாலைகள் தற்காலிக இடை நிறுத்தம் செய்யப்பட்டன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், விதிகளை மீறி செயல்பட்ட 14 பட்டாசு ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கொட்டப்பட்ட குப்பையில் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details