தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி இப்படியா பேசுவது' - ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு

விருதுநகர்: சுதந்திரத்துக்காக அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி வம்புக்கு இழுத்து அசிங்கமான அரசியல் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.

minister rajendra balaji
minister rajendra balaji

By

Published : Dec 17, 2019, 9:55 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறார். இனி எந்தத் தேர்தல் வந்தாலும் ஸ்டாலின் அஞ்சுவார். அதனால் தான் மீண்டும் மீண்டும் தேர்தலை நிறுத்துவதற்கு வழக்குத் தொடுக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்புமில்லை. இதில் சுடு தண்ணீரை ஊற்றி மதக்கலவரத்தை ஏற்படுத்துகின்ற பணியை திமுக, காங்கிரஸ் தலைமை செய்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்காக அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி வம்புக்கு இழுக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இத்தாலி பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்தியா நாசமாய் போக வேண்டும் என நினைக்கக்கூடிய ராகுல்காந்தி சாவர்க்கரின் வீரம் தெரியாமல் அவரை வைத்து அசிங்கமான அரசியலை நடத்தி வருகிறார்" என மிகக் கடுமையாக சாடிப் பேசினார்.

இதையும் படிங்க: தேனியில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக!

ABOUT THE AUTHOR

...view details