விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்பட்டுவரும் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதி முழுவதும் மிகவும் குறுகலான பகுதி என்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
சாத்தூர் காய்கறி மார்க்கெட் உழவர் சந்தைக்கு மாற்றம்! - விருதுநகர் செய்திகள்
விருதுநகர்: சாத்தூரில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் கரோனா தொற்று பரவல் காரணமாக உழவர் சந்தை, பேருந்து நிலையங்களில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் அனைத்தையும் இடமாற்றம் செய்து சில்லறைக் கடைகள் அனைத்தும் சாத்தூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலும் மொத்த விலைக் கடைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள உழவர் சந்தையிலும் செயல்படும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகம் சார்பிலும் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பிலும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தகுந்த இடைவெளியுடன், முகக்கவசங்கள் அணிந்து வந்து பொருள்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு கரோனா தொற்று பரவல் ஆரம்பித்தபோது இதேபோன்று காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.