விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வி.சுந்தரலிங்கபுரம் கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த ஆனந்த் (30) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 6 அறைகளில் மத்தாப்பூ மற்றும் தரைசக்கரம் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு பின்னர் இந்த ஆலை செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 24) மூடப்பட்டிருந்த அறையில் வைக்கப்பட்ட ரசாயன மூலப்பொருள்களை ஆலையின் பாதுகாவலர் எடுத்து ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி - Sattur Crack Factory Fire accident
விருதுநகர்: சாத்தூர் அருகே வி. சுந்தரலிங்கபுரம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஆலையின் பாதுகாவலர் சங்கரலிங்கம் என்ற விஜய் (30) கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.இதனையடுத்து அங்கு சென்ற சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத் துறையினர், தீயை அனைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து அப்பநாயக்கன்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்த தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (எ) விஜய் என்பவருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் நடைபெற்ற 6 பட்டாசு ஆலை வெடி விபத்தில் 36 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.