விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் இறுதி நாள் என்பதால் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மாங்கனி ஓடை , சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.