தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு டாஸ்மாக் கடையில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு! - விருதுநகர் குற்றச் செய்திகள்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே இயங்கிவரும் அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டிகளை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அரசு டாஸ்மாக் கடையில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு!
Tasmac bottles were theft

By

Published : Aug 26, 2020, 7:51 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 630 மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் கடையில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, காட்சிப் பதிவு பெட்டியை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். விற்பனையாளர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவல் துறையினர் கொள்ளை போன மதுக்கடையை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

மேலும் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க விசாரணையை தீவிரபடுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details