விருதுநகர்:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசு ரகங்கள் அட்டைப்பெட்டியில் பேக்கிங் செய்யப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் லாரி மூலம் அனுப்பப்படுவது வழக்கம்.
அந்த லாரி செட் நிறுவனத்தினர் பட்டாசு பேக்கிங் அட்டைப்பெட்டிகளை வைக்கும் கட்டடத்திற்கு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்பது விதி.
ஆனால், மெத்தனப்போக்குடன் பல லாரி செட் நிறுவனத்தினர் அரசிடம் அனுமதி பெறாமல் உள்ளனர். இந்நிலையில், சிவகாசி அருகே நாராயணபுரத்தில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன கட்டிடத்தில் அரசின் அனுமதியின்றி 1,500 பண்டல்கள் பட்டாசு வைக்கப்பட்டிருப்பதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.