தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவலர்

விருதுநகர்: கிணற்றில் அழுகிய நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலரின் உடல் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிணற்றில் காவலரின் உடல் சடலமாக மீட்பு
கிணற்றில் காவலரின் உடல் சடலமாக மீட்பு

By

Published : Apr 8, 2021, 11:06 PM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு, கிணற்றில் அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, கிணற்றின் உரிமையாளர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த, 2013ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் காவேரி மணியன் என்று தெரியவந்தது.

முகத்தில் மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தது. கழுத்து அறுபட்ட நிலையில் கிணற்றில் வீசப்பட்டதால், உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இவர், முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர். சில காரணங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலையா? தற்கொலையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐபேக் குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details