விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேவுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் நேற்று உயிரிழந்தார்.
அவரது, உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவந்த நிலையில், இன்று (அக்.05) அதிமுகவைச் சேர்ந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் அஞ்சலி செலுத்தினார்.